Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்மா பற்றிய கமெண்ட் : வாய்விட்டு மீண்டும் மாட்டிக்கொண்ட நாஞ்சில் சம்பத்

அம்மா பற்றிய கமெண்ட் : வாய்விட்டு மீண்டும் மாட்டிக்கொண்ட நாஞ்சில் சம்பத்

Advertiesment
அம்மா பற்றிய கமெண்ட் : வாய்விட்டு மீண்டும் மாட்டிக்கொண்ட நாஞ்சில் சம்பத்
, திங்கள், 26 செப்டம்பர் 2016 (13:21 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து, அதிமுக பிரமுகர் நாஞ்சில் சம்பத் தெரிவித்த கருத்து அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஏற்கனவே சென்ற ஆண்டு சென்னை, மழை வெள்ளத்தில் சிக்கிய போது, அதிமுக அரசு மற்றும் ஜெயலலிதாவின் செயல்பாடு பற்றி அவர் ஊடகங்களில் தெரிவித்த கருத்துகள் பலத்த சர்ச்சைக்கும், கிண்டலுக்கும் ஆளாகியது. இதனால், துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியையும் அவர் பறிகொடுக்க வேண்டியிருந்தது.
 
‘அம்மா வரட்டும்னு காத்துக்கொண்டிருந்தோம்’ என்ற அவரின் கருத்து இப்போதும், சமூக வலைத்தளங்களில் பெரும்பாலனவர்களால் கிண்டலடிக்கப்படுகிறது. மீம்ஸ்களில் இடம்பெருகிறது.
 
இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார். 
 
இதனால், அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அவரின் உடல்நலம் பற்றி சசிகலா போன்றவர்களிடம் விசாரித்து வருகிறார்கள். 
 
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சம்பத் “முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். விரைவில் அவர் வீடு திரும்புகிறார். மருத்துவர்களின் கண்காணிப்பில் அம்மா இருக்கிறார். அம்மாவின் கண்காணிப்பில் தமிழகம் இருக்கிறது” என்று பஞ்ச் வசனம் பேசியுள்ளார்.
 
முதல்வரின் உடல் நிலை குறித்து அவர் இப்படி பேசிய விவகாரம், அதிமுக வட்டாரத்தில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று  கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏர்செல், பிஎஸ்என்எல், டோகோமோ எது சிறந்த சேவை??