Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சின்னம்மா நீங்க உடனே முதலமைச்சராக வேண்டும்: ஓபிஎஸ் இருந்த கூட்டத்தில் கோஷம்

Advertiesment
சசிகலா
, சனி, 28 ஜனவரி 2017 (09:24 IST)
நேற்று மாலை நடைப்பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் திடீரென்று சின்னம்மா நீங்க உடனே முதலமைச்சராக வேண்டும், தமிழ்நாடே உங்களை எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருக்கு என்று கோஷமிட்டுள்ளனர். 


 

 
குடியரசு தினத்தன்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி நேற்று மாலை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைப்பெற்றது.
 
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பேசியாதாவது:-
 
கடந்த ஓராண்டாக நிறையப் பணிகள் பாக்கி இருக்கின்றன. அம்மா அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்துங்கள். கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை வரும் பட்ஜெட்டுக்குள் இலக்கு வைத்து முடித்து விடுங்கள், என்றார்.
 
சசிகலா பேசிக்கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் எழுந்து சின்னம்மா நீங்க உடனே முதலமைச்சராக வேண்டும், தமிழ்நாடே உங்களை எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருக்கு என்று கோஷமிட்டார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடியாது: அஞ்சலி சர்மா