Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியை கண்டு அஞ்சும் விஜய பாஸ்கர்

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (20:06 IST)
தமிழக முதல்வர் நலம் கருதி பூஜை செய்து வரும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், தற்போது அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் பதவி  பற்றிய அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலம் ஆரோக்கியம் பெற போக்குவரத்து துறை அமைச்சர் சிவ ஆலயங்களில் பூஜை செய்து வந்தார். தற்போது பெருமாள் கோயில்களிலும்  பூஜை செய்து வருகிறார்.
 
தமிழக இடைத்தேர்தல், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.  செந்தில் பாலாஜி தேர்தலில் வெற்றிப்பெற்றால், தனது அமைச்சர் பதவியும் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ளார் விஜய பாஸ்கர்.
 
தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் விஜய பாஸ்கர் பதவியில் முன்பு செந்தில் பாலாஜி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அமைச்சர் பதவி பறிபோக வாய்ப்புள்ளதாக விஜய பாஸ்கர் பயத்தில் உள்ளார்.
 
மேலும் இதனால் தான் செந்தில் பாலாஜி மீதான் வழக்கு உயர் நீதிமன்றத்தை கடந்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, விஜயபாஸ்கருக்கு ஆதரவாக உள்ளாராம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments