Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலைஞர் ஆட்சியை கைப்பிடிக்க எதையும் செய்வார்; ஸ்டாலினுக்கு வராது - வைகோ அதிரடி

கலைஞர் ஆட்சியை கைப்பிடிக்க எதையும் செய்வார்; ஸ்டாலினுக்கு வராது - வைகோ அதிரடி
, ஞாயிறு, 29 ஜனவரி 2017 (16:52 IST)
ஆட்சியை கைப்பிடிக்க எதையும் செய்ய துணிந்தவர் கலைஞர். கலைஞர் திறமை செயல் தலைவருக்கு [ஸ்டாலினுக்கு] சுட்டுப் போட்டாலும் வராது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


 

'திராவிட இளைஞர் விழிப்புணர்வு பாசறை' என்ற தொடர் நிகழ்ச்சிகளை நடத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டமிட்டுள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய வைகோ, "தமிழக அரசியலில் தெளிவற்ற நிலை நிலவுகிறது. இந்தியா முழுவதும் இந்நிலை பற்றி பேசப்படுகிறது. கலைஞர் அவர்கள் நினைவு இருந்தும், நினைவு இல்லாத நிலைமைக்கு வீட்டுச் சிறையில் அடைக்கப் போன்றதொரு நிலைமை. சகோதரி ஜெயலலிதா மறைந்து விட்டார். 1965இல் ஏற்பட்டது போன்ற கொந்தளிப்பு இப்போதும் ஏற்பட்டது உண்மை.

கிளாடியேட்டர் திரைப்படத்தில் தன்னுடைய தந்தையிடம் மகன், தன்னை அரசனாக்கிட கோரிக்கை வைப்பார். அப்போது தந்தை, 'உனக்கு தலைமை ஏற்கும் பண்புகள் இல்லை' என மறுத்து விடுவார். அதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்யவும் துணிவார். அதற்காக இதை இதோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டாம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசியல் கட்சி நுழையக் கூடாது என்பது சரி தான். ஏன்?. 1965ல் களத்தை முன்னெடுத்தது திமுக. மாணவர்கள் ஆதரித்தார்கள். பலனை அறுவடை செய்தது திமுக. எந்தப் போராட்டமாக இருந்தாலும் தொடங்கிய பிறகு எங்கே நிறுத்துவது என்பது தான் பிரச்சினை. சரியான இடத்தில் நிறுத்தாவிடில் அனைத்தும். விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.

ஹிந்தி எதிர்ப்பு போரில் இரண்டு காவலர்கள் எரிக்கப்பட்டார்கள். நிலமை மீறியதால் அண்ணா மாணவர்களிடமிருந்து போராட்டத்தை பெற்றார். அதன்பிறகு திமுக வெற்றி பெற்று ஹிந்திக்கு இடமில்லை என சட்டமன்றத்தில் பேசினார். தீர்மானம் போட்டார். தமிழ்நாடு என பெயர் சூட்டினார்.

பெரியாருக்கு தமிழக அரசு சமர்ப்பணம் என அண்ணா கூறினார். சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கினார். திமுகவில் தலைவர் பதவி இல்லை என அண்ணா பெரியாரிடம் சொன்னார். ஆனால் அண்ணா மறைந்த பிறகு அதை உடைத்தவர் கலைஞர். கலைஞர் நாவலரை வீழ்த்தி முதலமைச்சர் ஆனார்.

அவர் ஒரு ராஜதந்திரி. ஆட்சியை கைப்பிடிக்க எதையும் செய்ய துணிந்தவர் கலைஞர். கலைஞர் திறமை செயல் தலைவருக்கு சுட்டுப் போட்டாலும் வராது.

எந்தப் பிரச்சினையும் ஆராய்ந்து பதிலளிக்கும் திறமை ஓபிஎஸ்-இடம் உள்ளது. அதனால் தான் ஸ்டாலின் வெளியேறுகிறார். தடை வந்தாலும் ஓ.பி.எஸ்.ஸை ஜல்லிக்கட்டு நடத்தச் சொல்லுங்கள்.. காவல் துறை வேடிக்கை பார்க்கட்டும். நம்முடைய இயக்கம் நீர்த்துப் போகாத கட்சி. எம்.ஜி.ஆர். போல் என்னை நீக்கி விட்டார்கள்.

மாணவர்கள் மிக ஆபத்தானவர்கள், எச்சரிக்கையோடு அணுக வேண்டும். எந்தக் கட்சியைச் சாராத மாணவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக பேச வேண்டும். நம்பிக்கை இல்லாமல் போனது காரணம் பிரதான ஊழல்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்கா இல்லைனா என்ன, இங்கே வாங்க: கனடா பிரதமர்