மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டில் தாக்கப்பட்டதாகவும், பாதி உயிர் இருந்த நிலையில்தான் அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் என அதிமுக செய்தி தொடர்பளர் பொன்னையன் கருத்து தெரிவித்துள்ளர்.
ஜெ.வின் மர்ம மரணம் குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் உலவுகிறது. மேலும், அவரது மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். சசிகலாவிற்கு எதிராக திரும்பியுள்ள ஓ.பி.எஸ் அணியின் இந்த கருத்தை முன் வைத்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன் “ஜெ. மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும், ஓ.பி.எஸ் மற்றும் என்னைப் போன்ற முன்னணி நிர்வாகிகளையே அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. அவருக்கு நோய்த்தொற்று இருந்ததே காரணம் என கூறுகிறார்கள். மற்றவர்களுக்கு நோய் தொற்றும் வரும்.. சசிகலாவிற்கு வராதா?. அவர் மட்டும் எப்படி 75 நாட்கள் ஜெ.வுடன் இருந்தார்.
ஜெ.வை போயஸ் கார்டன் வீட்டில் தாக்கியுள்ளனர். இதனால் அவர் மயக்கம் அடைந்து, பாதி உயிருடன்தான் அப்பல்லோவிற்கு கொண்டு சென்றுள்ளனர். அப்பல்லோ நிர்வாகத்திற்கும், சசிகலா தரப்பிற்கும் இடையே ஏதோ ரகசிய உடன்படிக்கை உள்ளது. அதனால் செய்தியாளர்கள் சந்திப்பில், முன்னுக்குப் பின் முரணான தகவல்களை மருத்துவர்கள் கூறினர்" என்று அவர் தெரிவித்தார்.