நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவரே முதல்வராக வேண்டும் என தற்போதைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். வருகிற 9ம் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் முதல்வராக சசிகலா நியமிக்கப்பட உள்ளதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது “ ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர் சசிகலா. அதற்காக அவர் பிராயசித்தம் தேட வேண்டும். அவரை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்தது மிகவும் தவறு. போயஸ் கார்டனில் இருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை வெளியேற்ற வேண்டும். சசிகலா முதல்வரனால் ஜெயலலிதா ஆன்மா சாந்தி அடையாது.
தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து ஓ.பி.எஸ் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்து விட்டார்” என அவர் கூறினார்.