Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓரங்கட்டப்படும் மூத்த நிர்வாகிகள் : கரூரில் பாஜகவினர் அதிருப்தி

ஓரங்கட்டப்படும் மூத்த நிர்வாகிகள் : கரூரில் பாஜகவினர் அதிருப்தி

ஓரங்கட்டப்படும் மூத்த நிர்வாகிகள் : கரூரில் பாஜகவினர் அதிருப்தி
, சனி, 24 செப்டம்பர் 2016 (15:13 IST)
கரூர் மாவட்டத்தில் பாஜக மூத்த நிர்வாகிகளை, மாநில பாஜக இளைஞர் அணி செயலாளர் கோபிநாத், மற்றும் மாவட்ட தலைவர் நீ.முருகானந்தம் சேர்ந்து கூட்டாக ஓரங்கட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், கரூர் மாவட்ட பாஜக-வில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.


 

 
நாட்டில், வித்தியாசமான கட்சி என்ற பெயர் பாஜக வுக்கு உண்டு. அகில இந்திய தலைவர் முதல், கிளைத்தலைவர் வரை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்பட்டு, மற்றவர்களுக்கு கட்சி பொறுப்புகள் பாஜக வில் வழங்கப் படுகிறது.
 
மதம், ஜாதி ரீதியான வித்தியாசம் இல்லாமல், அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து செயல்படும் பெருமை பாஜக வுக்கு உண்டு. பேரன்பாடி என்று அழைக்கப்படும் தாய்கட்சியின் மாவட்ட தலைவருக்கு தான், பாஜக வில் பெரும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
ஆனால், கரூர் மாவட்ட பாஜக தலைவராக உள்ள முருகானந்தம், தனித்தன்மையுடன் செயல்படாமல், மாநில இளைஞர் அணி செயலாளர் கோபிநாத் என்பவரை சார்ந்து செயல்பட்டு வருவதாக, கரூர் மாவட்ட மூத்த நிர்வாகிகள் இடையே சராமரியாக புகார் எழுந்துள்ளது.
 
இதுகுறித்து கரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூறியதாவது.
 
மாவட்ட தலைவராக உள்ள முருகானந்தம், தாய் கட்சியை வழிநடத்துவது இல்லை. இளைஞர் அணி செயலாளராக உள்ள கோபிநாத் 10 பேர்களில் ஒருவர். ஆனால், அவர் பின்னால், முருகானந்தம் செல்கிறார். கரூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக கட்சி பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு தகவல் சொல்வது இல்லை. 
 
பல விழாக்களில் தாய் கட்சியை முன்னிலை படுத்துவது இல்லை. தாய் கட்சி நிர்வாகிகளை இளைஞர் அணி செயலாளர் கோபிநாத் மதிப்பது இல்லை. திட்டமிட்டு செயல்படும் கோபிநாத்தின் முயற்சிக்கு மாவட்ட தலைவர் முருகானந்தம் துணை போகிறார். 
 
தன்னிச்சையாக மாவட்ட கட்சியின் தலைமை அலுவலகத்தை, கோபிநாத் பயன்படுத்தி வருகிறார். இதனால், மூத்த நிர்வாகிகள் பலர் கட்சி அலுவலகம் வருவதை நிறுத்தி விட்டனர். கரூர் மாவட்டத்தில் பாஜகவை காப்பாற்ற, மாநில தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
 
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 
கடந்த சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி, கோவை மாவட்டத்தில் சில தொகுதிகளில் தான் பாஜக டெபாஸிட் பெற்றது. வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட உள்ளதாக மாநில தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் கரூர் மாவட்டத்தில் மாவட்ட தலைவர் முருகானந்தம், இளைஞர் அணி செயலாளர் கோபிநாத் செயல்பாட்டால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என மூத்த நிர்வாகிகள் அஞ்சுகின்றனர். 

webdunia

 

 
அவர்கள் கூறும்போது “மாநில இளைஞரணி செயலாளர் என்பது தமிழகத்தில் சுமார் 10 அல்லது 12 பேர் இருப்பார்கள், ஆனால் இந்த மாநில இளைஞரணி நிர்வாகி என்ற பட்டத்தை வைத்து பா.ஜ.க நிர்வாகிகளை ஒரங்கட்டுவதோடு, அந்த கூட்டு சதி செயலுக்கு கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவரும் கூட்டாக சேர்ந்து சதி செய்வதுதான் விதியா என்று மவுனம் காக்கும் பா.ஜ.க மூத்த நிர்வாகிகள், மாநில தலைவர் தமிழக பா.ஜ.க தலைவர் ஏன் மெத்தனம் காட்டுகின்றார் என்று தெரியவில்லை” என்கின்றனர்.
 
நாட்டையே ஆளும் கட்சி, மாநிலத்தில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் தாக்குபிடிப்பதில்லை ஏன் இந்த ரகசியம் கட்சிக்கு மட்டுமே தெரிந்த அல்லது தெரியாத விஷயங்களா?... பொறுத்து தான் பார்ப்போம் என்று கூறுகின்றனர் தற்போது கட்சியில் இணைந்துள்ள இளைய தலைமுறையினர்... பார்ப்போம் !!!

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர் - கரூர் மாவட்டம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்க நல்லா இருக்கனும்: ஜெயலலிதாவுக்கு அறிவுரை வழங்கிய சுப்பிரமணியன் சாமி!