Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குதிரை பேரம் நிரூபிக்கப்பட்டபோதும் இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா? ஸ்டாலின்

, திங்கள், 12 ஜூன் 2017 (23:27 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்க அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா அணியினர் பேரம் பேசியதை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏக்கள் குதிரை பேரம் நடந்தது குறித்து புலனாய்வு பத்திரிகைகள் எழுதினாலும் அதற்கு தகுந்த ஆதாரம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோக்களால், ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.



 


இந்த நிலையில் விலை கொடுத்து வாங்கிய எம்எல்ஏக்களுடன் அதிமுக தமிழகத்தை ஆட்சி செய்வது சரிதானா என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து  திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியபோது, 'உத்தம வேடம் அணிந்து தியானம், சபதம் செய்தவர்கள் எந்த அளவிற்கு மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது டைம்ஸ் நவ் ஆதாரம் மூலம் வெளிவந்துள்ளதாக கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் டைம்ஸ் நவ் வீடியோ முழுக்க முழுக்க பொய் என்றும், எம்.எல்.ஏக்களுக்கு பணம் யாரும் கொடுக்கவில்லை என்றும், பணத்தட்டுப்பாடு இருந்த காலத்தில் அவ்வளவு பெரிய தொகை கொடுத்ததாக கூறப்படுவது முழுக்க முழுக்க கற்பனை என்றும் தினகரன் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் பேரன் கல்யாணத்துக்குள் ரஜினி அரசியலுக்கு வருவாரா? கலாய்க்கும் அன்புமணி