Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தின் குழப்ப நிலையால் நான் வெற்றி பெறும். கங்கை அமரன்

Advertiesment
, சனி, 18 மார்ச் 2017 (05:02 IST)
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆர்.கே.நகர் தொகுதியின் பாஜக வேட்பாளராக நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக, திமுக என இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து பாஜக வேட்பாளரான நீங்கள் எப்படி வெற்றி பெறுவீர்கள் என்று செய்தியாளர்கள் நேற்று அவரிடம் கேட்டபோது, 'தமிழக அரசியல் தற்போது குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே ஆர்.கே.நகர் மக்கள் பாஜகவை நிச்சயம் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் போட்டியிடுவதாக கூறினார்


 


மேலும்  தேசிய அளவில் மிகப்பெரிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி என்னை வேட்பாளராக அறிவித்தது மிக்க மகிழ்ச்சி என்றும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஜகவுக்கு வெற்றியை தேடி தருவேன்' என்றும் அவர் கூறினார்

தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், அந்த பாஜகவால்தான் முடியும் என்றும் கூறிய கங்கை அமரன் இன்று முதல் ஆர்.கே.நகரில் தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் வளர்ச்சியை விவசாயிகள் தடுக்கின்றனர். வேலூர் ஆட்சியர் பேச்சால் அதிர்ச்சி