கச்சத்தீவு புனித அந்தோணியர் தேவாலயத்தின் தொடக்க விழாவில் தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி சசிகலா இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதியதாகவும், அதன்படி அந்நாட்டு அதிபர் ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகவும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவில் புதுப்பிக்கப்பட்ட புனித அந்தோணியர் தேவாலயத்தின் தொடக்க விழாவில் தமிழக மீனவர்கள் 100 பேர் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சசிகலா விடுத்த கோரிக்கையை ஏற்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டைமான் கூறியதாவது:-
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திறப்புவிழாவில் தமிழகத்தில் இருந்து 100 மீனவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா கொரிக்கை விடுத்தார். அதன்படி அதிபர் சசிகலாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்துள்ளதார், என்றார்.
மேலும் இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டைமான், திருமதி. சசிகலா மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.
எந்தவொரு அரசு பொறுப்பிலும் இல்லாத சசிகலா எப்படி கடிதம் முடியும்? எப்படி அவர் எழுதிய கடிதத்திற்கு பிறநாட்டு அதிபர் ஒப்புதல் அளிக்க முடியும்? சசிகலா என்ன தமிழக முதலமைச்சரா? என்ற பல கேள்விகள் உள்ளது.
இதன்மூலம் அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்து சசிகலாதான் எனபது தெளிவாக தெரிகிறது.