Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வரை அடுத்து தினகரன், அமைச்சர் மீதும் வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை

, திங்கள், 19 ஜூன் 2017 (06:45 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததாகவும், அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடபு உண்டு என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்படி முதல்வர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.



 


இந்த நிலையில் முதல்வரை அடுத்து அ.தி.மு.க., சசிகலா அணி வேட்பாளராக போட்டியிட்ட தினகரன் மற்றும் அமைச்சர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்த வழக்கு ஒன்றின் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டியில் விசாரணைக்கு வரவுள்ளது. இன்றைய விசாரணையின் முடிவை அறிந்து பின்னர் திமுகவும் இதுகுறித்து தனி வழக்கு ஒன்றை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை செயலர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர், தேர்தல் கமிஷனின் உத்தரவை நிறைவேற்றத் தவறினால், தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவேசம் எதிரொலி: தோனி, விராட் வீட்டிற்கு பாதுகாப்பு