Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி.டி.வி.தினகரன் யார்? ; கேள்வி எழுப்பிய தேர்தல் கமிஷன் : ஆடிப்போன சசிகலா

டி.டி.வி.தினகரன் யார்? ; கேள்வி எழுப்பிய தேர்தல் கமிஷன் : ஆடிப்போன சசிகலா
, வியாழன், 2 மார்ச் 2017 (10:12 IST)
பொதுச்செயலாளர் நியமனம் குறித்து சசிகலாவிற்கு அனுப்பிய நோட்டீசுக்கு, அவரது உறவினர் டி.டி.வி. தினகரன் பதில் அனுப்பியது தொடர்பாக, விளக்கம் கேட்டு சசிகலாவிற்கு மீண்டும் ஒரு நோட்டீசை அனுப்ப தேர்தல் கமிஷன் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது தொடர்பாக, அதிமுக எம்.பி.மைத்ரேயன் கொடுத்த புகார் மனுவிற்கு பதிலளிக்குமாறு சசிகலாவிற்கு தற்போது அவர் அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூர் சிறை முகவரிக்கே தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. அதுகுறித்து கடந்த மாதம் 28ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும், இல்லையேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 
 
அந்நிலையில் சசிகலா தரப்பிடமிருந்து தேர்தல் கமிஷனுக்கு பதில் அனுப்பப்பட்டது. அதில், தற்காலிகமாகவே சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், எனவே, இதில் விதிமீறல் எதுவுமில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சசிகலாவிற்கு அனுப்பிய நோட்டீசுக்கு தினகரன் பதில் அனுப்பியிருந்தார். இதனால், அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.
 
நாம் நோட்டீசு அனுப்பியது சசிகலாவிற்கு. ஆனால், பதில் வேறொருவருடமிருந்து வந்திருக்கிறதே என அதிர்ச்சியுடன் தேர்தல் கமிஷன் அதிகாரிகள், தினகரன் என்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ள, அதிமுக.வின் நிர்வாகிகள் பட்டியலை எடுத்து சரிபார்த்துள்ளனர். ஆனால், தேடி தேடி பார்த்தும் அதில் தினகரன் பெயர் இல்லை. 
 
ஏனெனில், வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையில் தான் சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கபப்ட்டார். அதில் பங்கேற்ற பொதுக்குழு நிர்வாகிகளின் பட்டியலும் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் ஓ.பி.எஸ், மது சூதனன் உள்ளிட பெயர்கள் இருந்தன. அதில் தினகரன் பெயர் இல்லை. இன்னும் சொல்லப் போனால், அதில் தினகரன் கலந்து கொள்ளவே இல்லை.
 
முக்கியமாக, அவசர கோலத்தில் துணைப் பொதுச்செயலாளராக தினகரனை நியமனம் செய்தது பற்றிய அறிவிப்பை முறைப்படி தேர்தல் கமிஷனுக்கு சசிகலா தரப்பு தெரிவிக்கவில்லை. எனவே, தினகரன் பற்றிய தகவலே தேர்தல் கமிஷனிடம் இல்லை.
 
எனவே, தினகரன் என்பவர் யார்? உங்களுக்கு பதில் அவர் எப்படி பதில் அனுப்பலாம்? அப்படியே அனுப்பினாலும், அதற்கான முறையான அதிகார மாற்றுக் கடிதம் ஏதும் இணைக்கப்படவில்லையே? என்கிற ரீதியில் சில கேள்விகளை முன்னிறுத்தி சசிகலாவிற்கு இன்றோ நாளையோ நோட்டிஸ் அனுப்ப தேர்தல் கமிஷன் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 
ஆனால், அதற்கான பதிலை காலம் தாழ்த்தாமல் உடனடியாக பதிலளிக்கும் படி சசிகலாவிற்கு உத்தரவிடப்படும் என தெரிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுச்செயலாளர் நியமன விவகாரம்; மார்ச் 28ம் தேதி வரை இழுத்தடிப்பு - சசிகலா திட்டம் என்ன?