Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பலத்தில் ஆடும் அரசின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (16:05 IST)
இந்த அரசை நிர்வாகம் செய்யும் முதலமைச்சர், கமிஷனர், கலெக்டர் தங்களின் ஆடைகளை களைந்து கருகும் தளிர்கள் முன் அம்மண ஆட்டம் போட்டு இருக்கிறார்கள். அது உண்மை தானே? உண்மை கசப்பான மருந்து தானே பழனிச்சாமி அவர்களே!


 
 
கார்ட்டூனிஸ்ட்  பாலா கல்லை எறிந்து பீரங்கிகளை தகர்ப்பவர் அல்ல. தூரிகைகள் கொண்டு இந்த அரசின் அவலட்சணங்களை துகில் உரிந்து காட்டி இருக்கிறார்.  அவரையும் அவரது கார்ட்டூனையும் நேர்மையாக எதிர்கொள்ளாமல் அடகு முறைகளை கையாண்டு இருக்கிறது.
 
சமீபத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இசக்கிமுத்து என்பவர் கந்துவட்டி கொடுமை தாங்காமல் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து மரணமடைந்தார். குடும்பத்துடன் தீக்குளித்த இசக்கிமுத்து தனக்கு ஏற்பட்ட கந்துவட்டி கொடுமை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பல முறை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாத நிலையில் நடைபெற்றது இந்த தான் தீக்குளிப்பு. 


 
 
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஐ ஏ எஸ், கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கார்ட்டூன் தொடர்பாக கொடுத்த புகாரின் அடிப்படையில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னையில் கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்துள்ளனர்.
 
பச்சிளம் தளிர்களின் மரணம் ஆனது, கருகி மடிந்த, அந்த ரோஜா மலர்களின் மரணம் ஆனது, உலகை உலுக்கிய சிரிய அகதியான,  கேட்பார் அற்று மடிந்து,  துருக்கியில்  கரை ஒதுக்கிய ஆலன் குருடியின் மரணத்திற்கு ஈடாக பேசப்பட்டது. ஒரு ஆலன் குருடியின் மரணம் ஐரோப்பாவின் எல்லைகளை சிரிய அகதிகளுக்கு திறந்து விட்டது. ஆனால் கல் நெஞ்சம் கொண்ட ஒரு அரசின் நிர்வாக திறனை குறித்து கார்ட்டூன் வரைந்தால் சிறை நிச்சயம் என்கிறார்   பழனிச்சாமி.
 
இது ஜன நாயகம் தானே ! இல்லை,  ஏன் என்றால் வன வாசம்.  எதற்கு என்றால் சிறை வசம் எனும் பிரிட்டிஷ் சர்க்காரா? 
 
பழனிச்சாமி ஒன்றும் லண்டன் மாநகரில் பிறந்தவர் இல்லையே?  பழனிச்சாமியின் தகப்பனார் வெள்ளைக்காரா துரையா?
 
மக்களின் மௌனம் களையும் வரை எங்களை ஆளுக! அதுவரைதான் இந்த ஆட்சியின் நாட்கள்.

மக்கள் போராடுவது என்று முடிவு எடுத்துவிட்டால் கல் எறிந்து கூட பீரங்கிகளை தகர்ப்பார்கள்
 
- பிடல் காஸ்ரோ











 
இரா காஜா பந்தா நவாஸ்
Sumai244@gmail.com

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

சங்கி என்றால் நண்பன் அல்லது தோழன் என்று அர்த்தம்: சீமான் விளக்கம்

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments