Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிர்வாகிகள் எதிர்ப்பு : கட்சி பணியிலிருந்து விலகினார் பிரேமலதா

நிர்வாகிகள் எதிர்ப்பு : கட்சி பணியிலிருந்து விலகினார் பிரேமலதா
, புதன், 6 ஜூலை 2016 (12:54 IST)
தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் எதிர்ப்பு அடிபணிந்த விஜயகாந்த் பிரேமலதா, கட்சிப் பணியிலிருந்து விலகி இருக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 

 
சட்டமன்ற தேர்தலில் தேமுதிக,  மக்கள் நலக் கூட்டணியுடன் இனைந்து மொத்தம் 104 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், விஜயகாந்த் உட்பட அனைத்து தேமுதிக வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர். தேமுதிகவின் வாக்கு எண்ணிக்கையும் அதள பாதாளத்திற்கு சென்றது.
 
அதன்பின், தேமுதிக சந்தித்த தோல்வி பற்றி விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரிடமும் ஆலோசனை நடத்தினார்.  அப்போது கட்சி பணிகளில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீப் ஆகியோரின் தலையீடு அதிகமாக இருக்கிறது மேலும் பிரேமலதாவின் தவறான கூட்டணி முடிவுதான் தோல்விக்கு காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
 
எனவே, எந்த முடிவானாலும் நீங்களே எடுங்கள் என்று அவர்கள் விஜயகாந்தை வற்புறுத்தினார்கள். மேலும், இதுவரை 17 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 4 முன்னாள் எம்.எல்.ஏக்கள் தேமுதிகவிலிருந்து  விலகி திமுக, அதிமுக போன்ற கட்சிகளிள் இணைந்துவிட்டனர். இன்னும் சிலரை வெளியே இழுக்க, மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் முயன்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.
 
எனவே கட்சியை காப்பாற்றும் பணியில் விஜயகாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.  யாரும் கட்சியை விட்டு செல்ல வேண்டாம். உங்களுக்கு எதிர்காலம் உள்லது. நான் இருக்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
 
அதேபோல், கட்சி பணியிலிருந்து பிரேமலதா விலகி உள்ளார். சமீபத்தில் தேமுதிக சார்பில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் கூட பிரேமலதா பங்கேற்கவில்லை. கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளில் இருந்து அவர் இனி விலகி இருப்பது என முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4ஜி ஸ்மார்ட்போன் வாங்கினால் 3 மாத அன்லிமிட்டட் டேட்டா பேக் இலவசம்