சமீபத்தில் நீட் தேர்வு காரணமாக மெடிக்கல் சீட் கிடைக்காத அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அனிதாவின் குடும்பத்தினர்களுக்கு பல அரசியல்வாதிகளும், திரையுலகினர்களும் நேரில் ஆறுதல் கூறியதோடு நிதியுதவியும் செய்தனர். குறிப்பாக இளையதளபதி விஜய் அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர்களுக்கு ஆறுதல் கூறி நிதியுதவி செய்ததோடு, அனிதாவுக்கு நானும் ஒரு சகோதரன் என்று நம்பிக்கை அளித்தார்.
இந்த நிலையில் அனிதா மரணம் அடைந்து 17 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் விஜய்யை போலவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் நாளை அரியலூர் சென்று அனிதா குடும்பத்தினர்களை சந்திக்கவிருப்பதாகவும், அவருடன் அவருடைய கணவர் மாதவனும் செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அரியலூர் செல்லும் தீபா அனிதா குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறுவது மட்டுமின்றி நிதியுதவியும் செய்யவுள்ளார். தீபாவின் இந்த விசிட் அனுதாபமா? அல்லது அரசியலா? என்று தெரியவில்லை என்றாலும் அனிதா குடும்பத்தினர்களுக்கு ஆறுதலும், நிதியுதவியும் கிடைக்கின்றது என்பதை பொறுத்தவரையில் நல்ல விஷயம் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.