Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருத்து சொல்லும் அளவிற்கு தினகரன் பெரிய ஆள் இல்லை: தீபா காட்டம்

Advertiesment
, வியாழன், 16 மார்ச் 2017 (11:32 IST)
ஆர்.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 

 

இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தினகரன், ஆட்சி மன்ற குழுவின் விருப்பப்படி நான் ஆர்.கே.நகர் தொகுதில் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் திமுகவை மட்டுமே நாங்கள் எதிர் அணியாக கருதுகிறோம். கண்டிப்பாக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெறுவேன்.  மறைந்த முதல்வர் ஜெ.வின் நலத்திட்டங்கள் அங்கு நிறைவேற்றப்படும். வருகிற 23ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்வேன் என அவர் தெரிவித்தார்.


இந்த நிலையில் ஜ.அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தினகரன் குறித்து கேட்டபோது, கருத்து தெரிவிக்கும் அளவிற்கு தினகரன் முக்கியமான நபர் இல்லை. இந்த தேர்தலில் பொதுமக்களால் அவர் நிச்சயம் புறக்கணிக்கப்படுவார். அ.தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகள் பலர் உள்ளனர். அப்படியிருந்தும் சசிகலா குடும்பத்தினரையே போட்டியிட வைத்திருப்பதால் தேர்தல் முடிவு அவர்களுக்கு எதிராகவே அமையும். அவர் போட்டியிடுவதால் எனது வெற்றி உறுதியாகி விட்டது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன். ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீச்சு - சேலத்தில் பரபரப்பு