Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவிக்கு வந்த திடீர் ஆபத்து

யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவிக்கு வந்த திடீர் ஆபத்து
, வியாழன், 25 மே 2017 (05:51 IST)
உ.பி மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அந்த மாநிலத்தின் முதல்வராக மாநிலங்களவை உறுப்பினர் யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் முதல்வர் பதவியை ஏற்றபோதிலும் அவர் தனது ராஜ்யசபா எம்பி பதவியை இதுவரை ராஜினாமா செய்யவில்லை.

இந்த நிலையில்  பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநில அமைச்சர்களாக பதவி வகிக்க முடியாது என்று அரசியல் சாசனம் கூறும்போது, கோரக்பூர் தொகுதி எம்பியான யோகி ஆதித்யாநாத் மற்றும் புல்பூர் மக்களவை தொகுதி எம்பியான கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோரது மாநில அரசு பதவிகளை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி சஞ்சய் ஷர்மா என்பவர் உபி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் சுதீர் அகர்வால் மற்றும் விரேந்திர குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனு தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகுமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் இது அரசியல் சாசனம் குறித்த வழக்கு என்பதால் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் வாதத்தினை கேட்காமல் முடிவெடுக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், அவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மரியாதையா பேசுங்க சீமான்: எச்சரித்த பாஜக பிரமுகர்