Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவை வைத்து பாஜக போடும் மாஸ்டர் ப்ளான் - அரசியல் அதிரடி

தீபாவை வைத்து பாஜக போடும் மாஸ்டர் ப்ளான் - அரசியல் அதிரடி
, வெள்ளி, 20 ஜனவரி 2017 (16:33 IST)
இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலகளவில் மோடியின் சூறாவளி சுற்றுப்பயணம் என்பது ஒரு வித்யாசமான கேளிக்கூத்தாகவும், அரசியல் விமர்சகர்கள் நாள்தோறும் காணும் வியத்ததகு வேடிக்கையாகவும் இருக்கிறது.


 

 
மோடியின் அங்கம் வகிக்கும் பா.ஜ.க இடம்பெறாத ஒரே ஒரு இடமாக தமிழகம் இருந்த நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்பட்டது இருவர் மட்டுமே!. ஒன்று பா.ஜ.க மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றொன்று அதே கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க வின் அன்புமணி ராமதாசு. தவிர, யாருடனும் கூட்டணி வைக்காமல் 37 இடங்களை மக்களவை உறுப்பினர் தேர்தலில் சாதித்த ஒரே ஒரு கட்சி என்ற பெருமையை பெற்றது இந்திய அளவில் அ.தி.மு.க கட்சியையே சாறும்.
 
இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு அ.தி.மு.க கட்சியை பா.ஜ.க கட்சியானது அடக்கி ஆள நினைக்க பல்வேறு திட்டங்களை தீட்டியது. அதாவது அண்ணன் எப்ப காலியாவான் திண்ணை எப்ப கிடைக்கும் என்று ஜெயலலிதாவின் மறைவை எதிர்நோக்கி இருந்த அ.தி.மு.க கட்சிக்கு, அதே கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தோழிக்கே, அப்பதவி கிடைத்தது. 
 
ஆனால் பல்வேறு இன்னல்களை தமிழக அரசிற்கு புகுத்த திட்டமிட்ட மத்திய அரசின் மோடி அரசு, முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக தலைமை செயலாளரை ரைடு செய்து சி.பி.ஐ விசாரணையில் வைத்ததோடு, சஸ்பெண்ட் செய்தது. அதாவது டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியை எப்படி கட்டுக்குள் வைத்துள்ளதோ? அப்படி!
 
இந்நிலையில் தமிழகத்தில் ஜெ.விற்கு கிடைக்கும் வாக்கு வங்கிகளை பெற  ஜெ வின் ரத்த சம்பந்தமாக இருக்கும் தீபாவை அரசியலுக்கு வர வைத்தது முழுக்க, முழுக்க தி.மு.க வின் தற்போதைய செயல்தலைவரான மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீஸன். அவருடைய ஏற்பாட்டில் தீபாவின் கணவரை வைத்து தீபாவை தமிழகத்தில் புகட்டி, அதன் மூலம் தி.மு.க மற்றும் தீபா பேரவை என்று இரண்டையும் வழிநடத்தியது. 
 
அ.தி.மு.க கட்சியை எப்படியாவது முடிக்கவும், ஒழிக்கவும் கூட்டு சதி நடத்திய இந்த விவகாரம் தற்போது சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட விஷயமாக தி.மு.க விற்கு உள்ளதாம். எப்படி என்றால் தீபா பேரவையை மத்தியில் ஆளும் இந்துத்துவா கொள்கை வாய்ந்த பா.ஜ.க வின் காவித்துவா-வின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் உள்ள சிலரின் ஆதிக்கத்தில் தீபாவை செயல்பட வைத்துள்ளனர். 
 
அதற்கு சகுனி திட்டம் தீட்டியது சுப்பிரமணிய சாமி. மேலும் தற்போது ஆங்காங்கே அ.தி.மு.க ஆட்சியில் வன்முறை ஏற்படுத்தி விட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை தமிழகத்தில் நடத்தவும் ஏதுவாக சுப்பிரமணிய சுவாமியே கூறினார். ஆனால் அவர் கூறிய விஷயத்திலிருந்து தி.மு.க கட்சியும், அ.தி.மு.க கட்சியும் உஷாராகியுள்ளது.

webdunia

 

 
காரணம் தமிழகத்தில் திராவிட கட்சிகளை அறவே ஒழித்து மோடியின் பா.ஜ.க ஆட்சியை கொண்டு வந்து சிலரின் உதவியுடன் தீபாவை கொண்டு வருவது தான் ராஜ ரகசியம் ஆம், மேலும் இதற்கு ஒய்வு பெற்ற நீதிபதிகளும், நடுநிலை நாளிதழ் ஒன்றும்(தினமலர்), வார இதழ் (துக்ளக்) ஒன்றும் கை சேர்க்க, பணத்திற்கு ஆங்காங்கே தீபா ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரு பெரும் தொகையை மடம் வைத்துள்ளவர்கள் பல கோடியை தந்துள்ளதும் தெரியவருகின்றது. 
 
இந்நிலையில் தீபா தற்போது தி.மு.க கட்டுப்பாட்டில் இல்லை. திராவிட கட்சிகளையும் ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசின் மோடி சர்க்கார் செயல்படுவதை தி.மு.க கட்சி அறிந்துள்ளது. இந்நிலையில் சிலரின் எதிர்ப்பாக தற்போது திகழும், அ.தி.மு.க கட்சியை காக்க., திராவிட கழக தலைவர் வீரமணி ஆதரவு கரம் நீட்டியுள்ளது மிகவும் கவனத்திற்கு சென்றுள்ளது. 
 
மேலும் ஜல்லிகட்டு காரணத்தை வைத்து தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்த சுப்பிரமணிய சுவாமி, ஏன் கர்நாடாகாவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வைத்து அங்கு வன்முறை நிகழ்ந்ததே? ஏன் அங்கு ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய முடியவில்லை, ஏனென்றால் சுப்பிரமணிய சுவாமி அங்கு ஏதும் செய்தாலும், சொன்னாலும் மத்தியில் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி இன்னும் பல ஆதாரங்களை சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக திரட்டும் என்றும், இழிச்சவாயர்கள் தமிழர்கள் தான் என்றும் தினம் தோறும், தமிழக மக்களை மிகவும் கேவலமாக சொல்லி வருவது மேன்மேலும் தமிழக மக்களையும் தமிழகர்களின் உணர்வுகளையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.
 
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் மத்திய அரசின் அங்கம் வகிக்கும் தமிழக பா.ஜ.க வும், சுப்பிரமணியசுவாமி திட்டிய தமிழர்களின் வார்த்தையில் வருவதோடு,. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலகளவில் மீண்டும் தமிழ் மொழி புரட்சியையும், தமிழர்களின் புரட்சியையும் மோடி எதிர்பார்க்க உள்ளார்.
 
இந்த முடிவை வைத்து தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு  முன்னதாக நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்பு மீண்டும் தமிழகத்தில் அதுவும் மத்தியில் ஆளும் பா.ஜ.க கட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தின் வாயிலாக மோடியே உணர்ந்துள்ளதால், தமிழ்நாட்டிற்கு ஜல்லிக்கட்டு என்ற வீரவிளையாட்டு மூலமாக மூக்கணாங்கயிறு போட முயன்ற மோடிக்கு நல்ல ஒரு பாடம். ஆனால் இந்த ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மோடியை கண்டித்து தி.மு.க கட்சி மறைமுகமாக போராட்டத்தை தூண்டும் நிலையில், அ.தி.மு.க கட்சி மெளனம் காக்கின்றது. 
 
விளைவு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசிற்கு தமிழக மக்கள் பாடம் புகுட்டும் காலம் விரைவில்
 
- சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாட்டிறச்சி உண்பவர்கள் எப்படி ஜல்லிக்கட்டு ஆதரவாளராக இருக்க முடியும்: போராட்டத்தை திசை திருப்பும் எச்.ராஜா!