Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலில் விழும் செந்தில் பாலாஜி; காலில் விழ வைக்கும் கே.சி.பழனிச்சாமி

காலில் விழும் செந்தில் பாலாஜி; காலில் விழ வைக்கும் கே.சி.பழனிச்சாமி
, வியாழன், 3 நவம்பர் 2016 (18:53 IST)
தேர்தலின் போதே காலில் விழ வைக்கின்றார் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி! அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியோ, வயது வித்யாசமின்றி காலில் விழுந்து வாக்குகள் கேட்கின்றார்!
 

 
தினமும் காலையில் 7 ஆயிரம் மாலையில் 7 ஆயிரம் வாக்காளர்களை நேரில் சந்திக்கும் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி எங்கே? சுமார் 700 வாக்காளர்களை கூட நேரில் பார்க்காத தி.மு.க வேட்பாளர் எங்கே?
 
அரவக்குறிச்சி வாக்காளர்களின் மனநிலை!!! ஒரு ஷாக் ரிப்போர்ட்:
 
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுவதையடுத்து, ஆங்காங்கே அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி பிரமுகர்களின் கவனமும் அரவக்குறிச்சி தொகுதி மட்டுமே அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. காரணம் செந்தில் பாலாஜி என்ற அதிமுக வேட்பாளருக்காக தானாம்.
 
webdunia

 
கரூர் தொகுதியில் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.வாக மாறியதோடு மட்டுமில்லாமல் அதிமுக தொகுதியாகவே மாற்றியது என்றால் அது முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி ஆகும்.
 
இந்நிலையில் அங்கு சுற்றி இங்கு சுற்றி, கரூர் மாவட்டத்தையே அதிமுக கோட்டையாக மாற்ற நினைத்த செந்தில் பாலாஜிக்கு கட்சி பதவி பறிப்பு மற்றும் அமைச்சர் பதவி பறிப்பு என்று எதிர்கட்சியினர் மற்றும் ஆளுகின்ற அதிமுகவில் போட்டுக் கொடுத்து செந்தில் பாலாஜியை அரசியல் வரலாற்றிலிருந்து நீக்க பல சதி திட்டங்கள் தீட்டி, அதிமுகவிலிருந்து ஒரங்கட்டப்பட்டு, அதிமுகவிலிருந்து விலக்க பல சதி திட்டங்களை தீட்டப்பட்டது.
 
இந்நிலையில், அவரை அதே அதிமுக கட்சி தொகுதி மாறி போட்டியிட வைத்தது. காரணம் ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் அதிமுக கட்சியும், அரவக்குறிச்சி தொகுதி மட்டும் திமுக கைப்பற்றியது.
 
webdunia

 
ஆகையால் இந்த முறை அதே அரவக்குறிச்சி தொகுதியையும் அதிமுக கைப்பற்ற வேண்டுமென்பதற்காக கட்சியில் வேண்டி இத்தொகுதி பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் ஆங்காங்கே பிரச்சாரங்கள், மேற்கொண்டு வரும் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியோ, திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியோ இருவரின் வாக்குகள் சேகரிப்பதில் பல பல அர்த்தங்கள் வெளியாகி உள்ளது.
 
காலை 7 மணி முதல் இரவு வரை பல பல பகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஒன்றியம், நகரம், கிராமம், குக்கிராமம் என்று காலையில் 7 ஆயிரம், மாலையில் 7 ஆயிரம் மொத்தம் 14 ஆயிரம் நபர்களை சுமாராக தினமும் சென்று அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்குகள் சேகரித்து வருகின்றார்.
 
அதே தொகுதியின் திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியோ, காலை மற்றும் இரவு மட்டும் வாக்குகள் சேகரித்து வருவதாகவும், மேலும் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்கும் இவருக்கு சூரிய ஒளி பிடிக்கவில்லையாம்? மேலும் சூரியன் உதிக்கும் போதும் மறையும் போது மட்டும் தான் இவரது செயல்பாடுகளும், வாக்கு சேகரிப்பும் தொடங்குகின்றதாம்.
 
மேலும் நேற்று (02-11-16) குப்பம் பகுதியில் திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியோ வாக்குகள் சேகரிக்கும் போது, அவரது காலில் வாக்காளர்கள் விழுந்து கும்பிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் ராஜபுரம் பகுதியில் ஆரத்தி தட்டிற்கு பணம் பிரித்து கொடுக்கும் போது தி.மு.க கட்சியினருக்கும் பொதுமக்களுக்குமிடையே பெரும் களகலப்பு ஏற்பட்டதாம். மேலும் பகுத்தறிவு பேசும் இவரது கட்சிக்கு ஆரத்தி எடுக்கும் மக்களிடையே அந்த ஆரத்தி தட்டை தொட்டு கும்பிடுவது கூட இல்லையாம்.
 
பல பல குற்றச்சாட்டுகளுக்கிடையே அங்குமிங்குமாக வாக்குகள் சேகரிக்கும் போது, அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று மக்களிடையே கூறும் போது நடுநிலையாளர்கள் இதையெல்லாம் செய்வதற்காக தான் போனமுறை உங்களை எம்.எல்.ஏ.வாக ஆக்கினோம், ஒன்றும் செய்யவில்லை, எம்.பி.யுமாக ஆக்கினோம் அப்போதும் ஒன்றும் செய்யவில்லை என்று கூறி ஒரு சில இடங்களில் இன்று போய் நாளை வா? என்று அனுப்பி வைக்கப்படுகின்றாராம்?
 
ஆனால் இதே தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆரத்தி எடுக்கும் பொதுமக்களிடையே எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வயது வித்யாசம் பார்க்காமல் காலில் விழுந்து வாக்குகள் சேகரிப்பதோடு, பொதுமக்கள் தாங்கள் இடும் ஆரத்தியை அப்படியே அவர்களையே வைத்தும் விட சொல்கின்றராம்!
 
மேலும் காலை முதல் இரவு வரை சில சில கி.மீட்டர் தூரம் இருந்தால் நடந்தே செல்வதோடு, பல, பல கி.மீட்டர் இருந்தால் காரில் மட்டும் சென்று ஒய்வில்லாமல் முதல்வரின் சாதனைகளை எடுத்துரைக்கின்றராம். விளம்பரம் செய்வதில் மட்டுமில்ல, பிரச்சாரத்தையும் அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை அதிமுக முதலிடம் வகிக்கின்றது.

செய்தி: செய்தியாளர் ஆனந்த்குமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணமாகாத பெண் கருவில் இயேசு: பரபரப்பு தகவல்