Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2017 (16:17 IST)
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், நெல்லை மாவட்ட முன்னாள் செயலாளருமான நயினார் நாகேந்திரன் அமிஷ்தா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.


 

 
நயினார் நாகேந்திரன் 1989-இல் அதிமுகவின் தன்னை இணைத்துக்கொண்டார். அதிமுகவில் பணகுடி நகரச் செயலாளர், இளைஞரணிச் செயலாளர், திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளர், தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் என பல்வேறு கட்சி பதவிகள் வகித்த நயினார் நாகேந்திரன் 2001-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.
 
அப்போது அவருக்கு ஜெயலலிதா அமைச்சர் பதவியை கொடுத்தார். இதன் காரணமாக அதிமுகவில் தென்மாவட்ட செயலாளராக கோலோச்சினார். ஆனால் அதன் பின்னர் 2006 சட்டமன்ற தேர்தலிலும், 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்த நயினார் நாகேந்திரன் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு இருந்தார்.
 
ஜெயலலிதா மறைந்த அதிமுக இரண்டு, மூன்று அணிகளாக உருவெடுத்துள்ளது. ஆனால் அவர் எந்த அணியிலும் சேராமல் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments