அதிமுக அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2017 (16:10 IST)
அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை விடுவித்து நடிகர் செந்திலை நியமனம் செய்து டிடிவி தினகரன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


 

 
டிடிவி தினகரன் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் சிலரை பொறுப்பிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று மதியம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதிமுக அமைப்பு செயலாளராக இருந்த கோகுல இந்திராவை நீக்கி விட்டு அந்த பொறுப்பில் நடிகர் செந்திலை நியமனம் செய்துள்ளார். ஆட்சி கலைந்தாலும் சரி கட்சியை விட மாட்டோம் என்ற முடிவில் உள்ளனர் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள்.
 
அதன்படி சட்டசபையை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நீருபிக்க வேண்டும் என ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இன்று ஆளுநர் வருவதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது வரை அவரது வருகை குறித்து எந்த தகவலும் இல்லை. 
 
இந்நிலையில் தினகரன், கட்சியை ஓபிஎஸ் மற்றும் எடப்படி ஆகியோரிடம் விட்டுவிட கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். தினகரன் ஒருபக்கம் அதிமுக நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து நீக்கி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் இருந்து நீக்க பொதுக்குழுவை கூட்ட ஆலோசித்து வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments