Publish Date: Mon, 12 Jun 2017 (17:36 IST)
Updated Date: Mon, 12 Jun 2017 (17:41 IST)
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கண்ஷியாம் மிஷ்ரா என்பவர் தலைமையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த 25 பேர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக கட்சியில் இணைய உள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கண்ஷியாம் மிஷ்ரா என்பவர் தனது ஆதரவாளர்கள் 25 பேருடன் சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். அப்போது அவர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கட்சியில் சேர விரும்புவதாக தெரிவித்தார். ஓபிஎஸ் அவர்களை தனது அணியில் உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சிக்கு உத்தரபிரதேசத்தில் கிளை அமைய இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் இரு அணிகளும் இணைய பேச்சு வார்த்தைக்காக அமைக்கப்பட்ட தனது அணி குழுவை கலைப்பதாக ஓபிஎஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.