ரஜினி வருகிற ஆகஸ்டு 15ம் தேதி புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும் அதில் பல்வேறு நடிகைகள் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த், தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள், தனக்கு நெருக்கமான பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரிடம் கடந்த சில நாட்களாக தீவிரமாக விவாதித்து வருவதாக தெரிகிறது.
இதையடுத்து அவர் தன்னுடைய கட்சியின் பெயர் மற்றும் கொடியை முடிவு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. வருகிற ஆகஸ்டு 15ம் தேதி, அவர் தன்னுடைய புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்வார் என செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே அவருக்கு பல நடிகர், நடிகைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் கட்சி தொடங்கினால் அதில் இணைய விருப்பம் இருப்பதாக நடிகை மீனா, நமீதா ஆகியோர் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், அதிமுகவின் தீவிர பிரச்சாரப் பேச்சாளராக செயல்பட்டு வந்த நடிகை விந்தியா, ரஜினி கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், காங்கிரஸ், அதிமுக, தாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து பலர் ரஜினியுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.