இன்று தமிழகம் முழுவதும் பரவலாக பெய்யத் தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை சராசரியை விட அதிகமாகப் பெய்யும் என்று மழை பற்றி ஆய்வு செய்துவரும் பெரம்பலூர் மழைராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து மழை இன்று அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அக்டோபர் 24ஆம் தேதி கணிப்பின்படி, வட கிழக்குப் பருவமழை தமிழகத்தில் சராசரியை விட கூடுதலாகப் பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக கடலூரிலிருந்து புதுக்கோட்டை வரையிலான கடலோர பகுதிகளில் மிக அதிகபட்ச மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் வடக்கு, வடமேற்கு மாவட்டங்களில் அதிக மழை பதிவாகும். விழுப்புரம், தர்ம்புரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சராசரியை விட கூடுதலாக பெய்யும் வாய்ப்புள்ளது.
மேலும் வடகிழக்குப் பருவமழை ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் அதிக அளவிற்கு பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு ஆந்திரத்தின் கடலோர பகுதியிலும், வடக்கு, மத்திய ஆந்திராவிலும், வடக்கு கர்நாடகா, மத்திய தென் கர்நாடக பகுதிகளிலும், கேரளாவின் கொல்லம், ஆலப்புழை, கண்ணணூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 25 முதல் 30ஆம் தேதி வரையிலும், நவம்பர் 2 முதல் 17ஆம் தேதி வரையிலும் ஒரிரு நாட்களைத் தவிர, தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நிலநடுக்கத் தேதி கணிப்பின்படி, நவம்பர் 2,12, 25 ஆகிய தேதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது.