அக்டோபர் 3ஆம் தேதி வானிலை கணிப்பின்படி வட கிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் பெய்யத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகி வருகிறது என மழை பற்றி ஆய்வு செய்துவரும் பெரம்பலூர் மழை ராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய அறிக்கையில், அக்டோபர் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தேன். அதேபோல், நெல்லை, தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் முன்கூட்டியே வட கிழைக்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி வானிலை கணிப்பின்படி, வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி உள்ளது. இதனால், வழக்கத்தை விட இரண்டு வாரங்களுக்கு முன்பே வட கிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும்.
தென்மேற்கு வங்க கடல் பகுதியின் தெற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளதால் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பெரும்பாலான நாட்களில் தென் தமிழகம் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 8ஆம் தேதிக்குள் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.