தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் 29ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மழை குறித்து ஆய்வு செய்து வரும் மழைராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :
டிசம்பர் 22ஆம் தேதி அனுப்பியிருந்த செய்திக் குறிப்பில் 24 முதல் 27 ஆம் தேதி வரை மழை பெய்ய வாயப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன். ஆனால், வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்யவில்லை.
இந்நிலையில், டிசம்பர் 27ஆம் தேதி கணிப்பின்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகையை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் டிசம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், பெரம்பலூர், அரியலூர் உட்பட தமிழகத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 20ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன். 20 ஆம் தேதி ஈரானில் 6.5 ரிக்டர் அளவிலும், 21ஆம் தேதி ஜப்பானில் 7.4 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
வானிலை மற்றும் நிலநடுக்க தேதி கணிப்பின்படி டிசம்பர் 29ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மழைராஜ் குறிப்பிட்டுள்ளார்.