பொட்டாஷ், பாஸ்பேட் விலைகள் உயர்ந்துள்ளதால் யூரியாவின் விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று உர உற்பத்தியாளர்கள் சங்கம் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
யூரியா விலை உயராத நிலையில், பொட்டாஷ், பாஸ்பேட் விலைகள் உயர்வதால், விவசாயிகள் யூரியாவை அதிகம் பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்திவிடும் என்று கூறியுள்ள உர உற்பத்தியாளர்கள், அது மண்ணை பெரிதும் பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.
அப்படி ஒரு நிலை ஏற்படுவதைத் தவிர்க்க பொட்டாஷ், பாஸ்பேட் விலைகளை அரசு உடனடியாக உயர்த்துவது அவசியம் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
எனவே யூரியா விலையை உயர்த்துவதன் மூலம் இந்த மூன்று உரங்களையும் சம அளவில் பயன்படுத்தும் நிலை ஏற்படும் என்றும், அது மண்ணிற்கும், உற்பத்திக்கும் உதவும் என்று கூறியுள்ளது.
ஆயினும் இப்போதுள்ள நிலையில் உர விலைகளை அரசு உயர்த்த அனுமதிக்காது என்றே கூறப்படுகிறது. யூரியாவை மத்திய அரசின் விலைக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க உர அமைச்சகம் விரும்பவில்லை. அவ்வாறு செய்வது அரசியல் ரீதியாக பிரச்சனைகளை உருவாக்கிவிடும் என்று அரசு கருதுகிறது.