மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 15,118 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை விநாடிக்கு 6,800 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று மாலை 4 மணிக்கு 15 ஆயிரம் கன அடியை எட்டியது. அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அணையில் 82.90 அடிக்கு நீர் உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி ஆகும். தற்போது அணையில் 44.90 டிஎம்சி தண்ணீர் உள்ளது.