தற்போதைய வானிலை கணிப்பின்படி, கர்நாடகா, வடக்கு கேரளா, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 18ஆம் தேதி முதல் 22 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :
மே 3ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் மே 7 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தேன். மே 6 வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. மே 7 முதல் தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவுகிறது.
இந்நிலையில், தற்போதைய வானிலை கணிப்பின்படி கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 18 முதல் 22ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவில் மே 26 அல்லது 27 முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 13ல் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவத்திருந்தேன். அதேபோல் ஜப்பானில் 6.2 ரிக்டர் அளவிலும், 12ஆம் தேதி ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்ததுடன் 8 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
வானிலை மற்றும் நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி மே 21, 29 ஆகிய தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.