தென்மேற்கு வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால், தமிழ்நாட்டில் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,
கடந்த 22ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தது போல், நவம்பர் 23 முதல் 27 வரை தென் தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது. கடந்த இரு தினங்களாக மழையின் தாக்கம் குறைந்தாலும் தொடர்ந்து தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நவம்பர் 29ஆம் தேதி கணிப்பின்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகைக்கு தென் கிழக்கே மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் 29ஆம் தேதி இரவு முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை மீண்டும் பலத்த மழை பெய்ய வாயப்புள்ளது.
2 மற்றும் 3ஆம் தேதி மழையின் தாக்கம் ஒரு சில இடங்களில் குறைந்து காணப்பட்டாலும், டிசம்பர் 3ஆம் தேதி இரவு முதல் 6ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 6ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது.