தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மே 10 வரை மழை நீடிக்கும் என வெப்துனியாவிற்கு தெரிவித்திருந்தேன்.
10ம் தேதி திருச்சி, கரூர், சேலம், நீலகிரி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. தற்போது பெய்து வரும் இந்த மழை மே மாதம் 15 ம்தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது.
எனினும், பெரும்பலான இடங்களில் பகல் நேரத்தில் கடும் வெப்பமும் சில பகுதிகளில் மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் மழையும் நீடிக்கும் என்பதால் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கமும் மாலை நேரத்தில் சற்று வெப்பம் குறைந்தும் காணப்படும். தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் மழையின் தாக்கம் சற்று கூடுதலாக காணப்படும்.