தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால், பிப்ரவரி 18ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் பிப்ரவரி 9, 10 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தேன். அதேபோல் 9, 10 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது. மற்ற நாட்களில் வறண்ட வானிலையே நீடிக்கிறது.
இந்நிலையில் தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் தொண்டியை மையமாகக் கொண்டு ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இதனால் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, இராமேஸ்வரம், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த மழையும், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தால் காவிரி டெல்டா மாவட்டங்கள் கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வானிலை கணிப்பின்படியும், நிலநடுக்க தேதியின் கணிப்பின்படியும் பிப்ரவரி 18ஆம் தேதி உலகின் ஏதாவது ஒரு பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதியாகும்.