நமது நாட்டின் நீர் வளத்தை காப்பதே நாம் எதிர்கொள்ளவுள்ள மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சி்ங் அலுவாலியா கூறியுள்ளார்.
டெல்லியில் இந்திய வன பல்கலைக் கழக்கத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய மாண்டெக் சிங் அலுவாலியா, “நமது நாடு எதிர்கொள்ளப் போகும் மிகப் பெரிய சவாலாக நீர் வளப் பாதுகாப்பு இருக்கும். எனவே வனப் பாதுகாப்பை நீர் வளங்களின் பாதுகாப்புடன் இணைத்து மேம்படுத்தும் கல்வித் திட்டத்தை இப்பல்கலை உருவாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நமது நாட்டின் மக்கள் தொகை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், நீர் வளம் அதற்கு ஏற்றாற்போல் உயரவில்லை. நீர் வளம் அதிகரிக்காமல் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு புதிய சாதனையை நம்மால் எட்ட முடியாது என்று கூறிய மாண்டெக் சிங், நீர் வளங்களை மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.