Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிலம் கையகப்படுத்தலை முறைபடுத்தச் சட்டம்: வீரப்ப மொய்லி

Advertiesment
தொழிற்சாலை சிறப்பு பொருளாதார மண்டலம் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி சட்ட வரைவு விவசாய நிலங்கள் கையகப்படுத்தல்
, புதன், 29 டிசம்பர் 2010 (15:17 IST)
தொழிற்சாலை அமைக்கவோ அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காகவோ விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கூறும் புதிய சட்ட வரைவு விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மொய்லி, விவசாய நிலங்கள் கையகப்படுத்தும்போது, அவைகள் சந்தை விலைக்கு மட்டுமே வாங்கப்பட வேண்டும் என்பதை இந்தச் சட்ட வரைவு கட்டாயமாக்கும் என்று கூறியுள்ளார்.

“தொழிற்சாலைகளுக்காகவும், வர்த்தக காரணங்களுக்காகவும் நிலம் கையகப்படுத்தப்படு்ம்போது, அதற்கான வழிமுறைகளில் மாற்றம் கொண்டு வரவே இச்சட்ட வரைவு கொண்டுவரப்படுகிறது. நில கையகப்படுத்தல் எந்த விதத்திலும் விவசாயிகளை சங்கடத்தில் ஆழ்த்தக்கூடாது என்பதே எங்களது குறிக்கோளாகும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil