தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடலூரை மையமாகக் கொண்டு உருவாகிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக நாளை முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்று மழை குறித்து ஆய்வு செய்துவரும் பெரம்பலூர் மழைராஜ் கூறியுள்ளார்.
வட கிழக்குப் பருவ மழை மீண்டும் பொழியத் தொடங்குவது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் மேற்கு வங்கக் கடலில் கடலூரை மையமாகக் கொண்டு உருவாகிவரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணாமாக இன்று இரவு முதல் தமிழ்நாட்டில் ஆங்காங்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. நாளை முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும்.
நவம்பர் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், காவிரி டெல்டா மாவட்டங்கள், இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, நீலகிரி, சேலம், அரியலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. அதனால், ஆந்திரா, கேரளார கர்நாடகா மாநிலங்களிலும் ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும். இந்த தாழ்வு நிலையானது வலுவடையும்போது ஒரு பகுதி ஆந்திரா நோக்கி நகர்ந்தாலும், மற்றொரு பகுதி தென் தமிழகத்தை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது.
வானிலை கணிப்பின்படியும், நிலநடுக்கத் தேதியின் கணிப்பின்படியும் நவம்பர் 18ஆம் தேதி உலகில் ஏதாவது ஒரு பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது.