அக்டோபர் 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் நிலை உள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் பெரம்பலூர் மழை ராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று கொடுத்துள்ள வானிலை முன் கணிப்பு வருமாறு:
அக்டோபர் 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை கடலூர், புதுவை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், தென் தமிழகத்தில் புதுக்கோட்டை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவ மழையை பொறுத்தவரை, அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பதிவாக வாய்ப்புள்ளது. மேலும் கடலூர், புதுவை, விழுப்புரம், திருவாரூர், சென்னை ஆகிய இடங்களில் கூடுதலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் வரலாறு காணாத மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழையை விட வடகிழக்கு பரு்வ மழை கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய கேரளம், வடக்கு கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நிலநடுக்கத் தேதி கணிப்பின்படி, அக்டோபர் 18ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதியாகும்.