2010-11ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய உணவுக் கழகம் இதுவரை கொள்முதல் செய்துள்ள கோதுமையின் அளவு இந்த நிதியாண்டில் 30 விழுக்காடு குறைந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் 5.28 இலட்சம் டன் கோதுமையை கொள்முதல் செய்தது இந்திய உணவுக் கழகம். இந்த ஆண்டில் 3.67 இலட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் விளைச்சல் இன்னமும் சந்தைக்கு வராததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பொதுவாக கோதுமை கொள்முதல் மார்ச் மூன்றாவது வாரத்தில் தொடங்கும். ஏப்ரல் முதல் கொள்முதல் அதிகரித்து ஜூன் மாதத்தில் முடிந்துவிடும். இன்று முதல் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் கோதுமை கொள்முதல் தொடங்குகிறது.
கடந்த நிதியாண்டில் 2.25 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்த மத்திய அரசு, இந்த நிதியாண்டில் 2.62 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யவுள்ளது.