வட இந்திய மாநிலங்களில் தென் மேற்குப் பருவ மழை பரவலாக பெய்ததன் விளைவாக இந்த ஆண்டில் கோதுமை உற்பத்தி வரலாறு காணா அளவிற்கு 82 மில்லியன் டன்களாக உயரும் என்று மத்திய வேளாண் அமைச்சக செயலர் பி.கே.பாசு கூறியுள்ளார்.
சீனாவி்றகு அடுத்தபடியாக உலகின் மிகப் பெரிய உற்பத்தியாளரான இந்தியா கடந்த ஆண்டில் 80.71 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி செய்திருந்தது.
“பருவ மழை சில இடங்களில் அதிகமாக பெய்ததால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், நல்ல மகசூல் காரணமாக ஒட்டுமொத்தமாக உற்பத்தி 82 மில்லியன் டன்னாக உயரும்” என்று பாசு கூறியுள்ளார்.
இந்தியாவில் தென் மேற்கு பருவமழைக்குப் பின் நவம்பரில் துவங்கும் கோதுமை சாகுபடி மார்ச்சில் முடிகிறது. இந்த பருவத்தில் அறுவடை செய்யப்படுவதே இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 71 விழுக்காடாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.