ஜனவரி 11ஆம் தேதி கணிப்பின்படி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்தக் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்து வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
கடந்த ஜனவரி 3 முதல் 5 வரை காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகக் கடலோர மவட்டங்களிலும் தமிழகத்தின் சில பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. அதன் பிறகு மழை குறைந்து வறண்ட வானிலையே நீடித்தது.
இந்நிலையில் ஜனவரி 11ஆம் தேதி கணிப்பின்படி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் பாம்பனுக்கும், நாகைக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சூழல் உள்ளது. இதனால் ஜனவரி 13ஆம் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழக கடலோர மாவட்டங்களிலும், அரியலூர், பெரம்பலூர் உள்ப்ட தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஜனவரி 17 வரை பெரும்பாலான நாட்கள் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. நிலநடுக்கத் தேதியின் கணிப்பின்படி ஜனவரி 12 அல்லது 16 ஆகிய தேதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.