ஈரோடு மாவட்டத்தில் பரிசோதனைக்காக கருசிவப்பு கலரில் பயிரிடப்பட்டுள்ள கம்பு பயிரை விவசாயிகள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.
விவசாய துறையில் ஒவ்வொரு பயிரிலும் நவீன வகைகள் அறிமுகம் ஆவதும் அதேபோல் செடிகளில் ஒட்டுரகங்கள் வந்துள்ளதும் அனைவரும் தெரிந்த விஷயமாகும். ஆனால் கம்பு பயிர் என்றுமே பச்சை நிறமாகத்தான் இருக்கும் ஆனால் தற்போது கருசிவப்பு கலரில் கம்பு பயிர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிர் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. பரிசோதனைக்காக நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் தற்போது செண்டுமல்லி பயிரில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஏ.வி.டி., செண்டுமல்லி நிறுவனத்தினர் இந்த புதிய கண்டுபிடிப்பையும் அறிமுகம் செய்துள்ளனர்.
இந்த கருசிவப்பு நிறம்கொண்ட கம்பு பயிர் இயற்கை வர்ணம் தயாரிக்க பயன்படப்போவதாக கூறுகின்றனர். இந்த கருசிவப்பு கம்பு பயிரை கையில் நசுக்கிப்பார்த்தால் கை நவால்பழ கலரில் மாறிவிடுகிறது. இந்த கலரை சோப்பு மூலம் அழித்தால் மட்டுமே அழிகிறது.
இது குறித்து ஏ.வி.டி., செண்டுமல்லி நிறுவனத்தின் துணை தலைவர் இளங்கோவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த கருசிவப்பு கம்பு தற்போது பரிசோதனைக்காக எங்கள் நிறுவனம் மூலம் கொடுத்துள்ளோம். இதன் முழுபயன்பாடுகள் குறித்து இப்போது எவ்வித கருத்தும் கூறமுடியாது என்றார்.