முந்திரி செடியைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்ல அடிக்கப்படும் எண்டோசல்ஃபான் அதனை பாவிக்கும் விவசாயிகளை கடுமையாக பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அதன் பயன்பாட்டிற்கு நிரந்தரத் தடை விதிக்குமாறு நுகர்வோர் அமைப்புகளும், தன்னார்வ தொண்டு அமைப்புகளும் மத்திய அரசி்ற்கு கோரிக்கை விடுத்துள்ளன.
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் இன்று செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்த மித்ரமாத்யாமா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்டோசல்ஃபானுக்கு கர்நாடக அரசு 60 நாட்கள் தடை விதித்திருப்பை பாராட்டிய அதே வேளையில் அதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
கேரள, கர்நாடக அரசுகளைப் போல் நாட்டின் இதர மாநில அரசுகளும் எண்டோசல்ஃபான் பயன்பாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ள இவ்வமைப்புகள், இதற்கு மத்திய அரசு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளன.