தற்போதைய வானிலை கணிப்பின்படி ஆகஸ்ட் 22 முதல் 28ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில்,
ஆகஸ்ட் 20 ம்தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் ஆகஸ்ட் 22 ம்தேதி முதல் 28 ம்தேதி வரை வடக்கு ஆந்திரா உள்பட ஆந்திராவின் பெரும்பாலான பகுதிகளில் கன மழையும், ஒரிஸா, கர்நாடாகா, வடக்கு கேரளா ஆகிய பகுதிகளில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் கடைசி வாரம் மற்றும் செப்டம்பரில் தீவிரமாகும் தென்மேற்கு பருவமழையால் மேட்டூர் அணை நிரம்புவதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. இதனால் மேட்டூர் அணை செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் திறப்பிற்கான வாய்ப்புகளும் கர்நாடகாக, வடக்கு கேரளாவில் மீண்டும் பலத்த மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இதே சமயத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலத்த மழையும் வடமேற்கு மாவட்டங்களில் மிக பலத்த மழையும், தென் மாவட்டங்களில் சராசரியைவிட சற்று குறைவாகவும், காவிரி டெல்டா, ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சராசரி மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி ஆகஸ்ட் 27, செப்டம்பர் 2 ஆகிய தேதிகள் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதியாகும்.