Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெப்பத் தாக்கத்தினால் காய்ந்த ஏலக்காய் செடிகள்.ஏலக்காய் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி - விவசாயிகள் கவலை

J.Durai
சனி, 27 ஏப்ரல் 2024 (14:13 IST)
தேனி மாவட்டம் போடியில் நறுமணப் பொருளான ஏலக்காய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.
 
ஏலக்காய் வர்த்தகத்தின் மையப் பகுதியாக விளங்கும் போடி பகுதியில்,மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் ஏலக்காய் வாரியம் மூலமாக விவசாயிகளிடம் சாம்பில் பெறப்பட்டு ஆன்லைன் மூலமாக வியாபாரிகளால் கொள்முதல் செய்து தரம் பிரிக்கப்பட்டு ரகவாரியாக ஏலக்காய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 
 
தனியார் நிறுவனங்களும் இதே நடைமுறையை பின்பற்றி வரும் நிலையில், உற்பத்தி மற்றும் வரத்து குறைவின் காரணமாக சந்தையில் தேவை அதிகரிப்பை அடுத்து ஏலக்காய் விளையானது ஆயிரம் ரூபாயிலிருந்து 2000 வரையிலும்,தரம் பிரிக்கப்பட்ட முதல் தர ஏலக்காய் ரூபாய் 3000 வரையிலும் விலை போகிறது.
 
போடியில் இருந்து தமிழக மட்டுமல்லாது, வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கான  ஏற்றுமதி வரையில் வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில்,போதிய மழை இல்லாத காரணத்தால் உற்பத்தி குறைந்து தேவை அதிகரிப்பின் காரணமாக, கடும் விலை உயர்ந்து வருவது வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
கோடை காலம் என்பதால் இந்த விலை ஏற்றம் தொடர்ந்து சில மாதங்கள் நீடிக்கும் என விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

சென்னை சென்ட்ரல் அருகே தபால் நிலைய மேற்கூரை இடிந்து விபத்து.. ஊழியர்கள் படுகாயம்..!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments