தென் மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்துள்ளதால், வரும் 28ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,
டிசம்பர் 26ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடலூரை மையமாகக் கொண்டு ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வூ நிலை உருவாகி தீவிரமடைந்துள்ளது. இதனால் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி இரவு முதல் சென்னை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, இராமநாதபுரம், காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழையும், திருச்சி, மதுரை, அரியலூர், தேனி, திண்டுக்கல், கோவை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 21ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் 27ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தாலும், 24ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடையாத காரணத்தால் தமிழகத்தில் மழை பெய்வது தாமதமானது, இந்நிலையில் 26ஆம் தேதி கணிப்பின்படி பரங்கிப்பேட்டை பகுதியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த நிலையால் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலுஇதன் தாக்கம் காணப்படும். இந்த மழை ஜனவரி 2ஆம் தேதி வரை நீடிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை இராமநாதபுரம், கடலூருக்கு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலநடுக்க தேதி கணிப்பின்படியும், வானிலை கணிப்பின்படியும் 29ஆம் தேதி உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மிக பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.