Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

24ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்

Advertiesment
குறைந்த காற்றழுத்த தாழ்வு
, புதன், 22 டிசம்பர் 2010 (19:52 IST)
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 24 முதல் 27ஆம் தேதி தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்து வரும் மழைராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்‌பி‌ல்,

டிசம்பர் 22ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தொண்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் டிசம்பர் 24 முதல் 27ஆம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் பெரும்பாலான வட மாவட்டங்களிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் மழை தேதி கணிப்பின்படி டிசம்பர் 29, 30 மழை பெய்ய வாய்ப்புள்ள தேதிகளாகும்.

ஏற்கனவே வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் டிசம்பர் 20ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தது போல் அன்று இரவு ஈரானில் 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்தனர். 3 கிராமங்கள் பலத்த சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று மழைராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil