Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 ஆண்டுகளை எட்டிவிட்டது கொலை விதை பி.டி.பருத்தி எதிர்ப்பு ஆர்பாட்டம்!

Advertiesment
BT பருத்தி
, புதன், 28 மார்ச் 2012 (16:58 IST)
FILE
மரபணு மாற்ற பி.டி. பருத்தி விதைகளை எதிர்த்து நாடு முழுதும் விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் போராட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. நேற்றோடு போராட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அரசு வாளாயிருந்து வருகிறது.

ஆவேசமடைந்த விவசாயிகள் இந்தத் தொழில்நுட்பத்தை முழுதும் தடை செய்யவேண்டும் என்று இந்திய அரசியல் தலைவர்களை வற்புறுத்தியுள்ளனர்.

இந்த விதைகளை ஏகபோக முறையில் வைத்திருக்கும் மான்சான்டோ உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் மீது சுற்றுசூழால் ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர்.

பருத்தி பயிரீட்டு பகுதிகளில் உள்ள நெருக்கடிகளை தீவிர மறு ஆய்வுக்குட்படுத்தி மறு மதிப்பீடு செய்ய விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

நேற்று டெல்லி ஜந்தர் மந்தர், ஆந்திராவின் பருதிப் பயிரீட்டுப் பகுதிகள், மத்தியபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இந்த பி.டி. காட்டன் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்த பி.டி. அரக்கக்ப் பருத்தி விதைகளால் விவச்சயிகள் தற்கொலை எண்ணிக்கை, குறிப்பாக மகாராஷ்டிராவில் அதிகம் நிகழ்ந்தது. இதனால் இங்கு ஆர்பாட்டம் சற்று உரக்கவே நிகழ்ந்துள்ளது. பல கிராமங்களில் விவசாயிகள் பி.டி. பருத்தியை எரித்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மனைவிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அரக்க விதை உற்பத்தியாளர்களான மான்சான்டோவிற்கு நாடு முழுதும் 10,000 ஹெக்டேர்கள் பி.டி பருத்தியை விதைக்க அனுமதியளிக்கப்பட்டது. இன்று இவ்வளவு போராட்டங்களுக்கும், எதிர்ப்பும் தற்கொலைகளும் அரசின் காதுகளுக்கு எட்டாமல் போக 12 மில்லியன் ஹெக்டேர்கள் பி.டி. காட்டன் பயிரிடப்பட்டுள்ளது.

பி.டி. பருத்தியினால் விளைச்சல் கடுமையாகக் குறைந்ததோடு, பூச்சியை தடுப்பதிலும் அந்த பருத்தி விதை தோல்வி கண்டுள்ளது, மேலும் புதிய பயிர்நோய்களும் வரத் தொடங்கியுள்ளதாக அரசு தரவுகளே கூறியுள்ளன.

ஆந்திராவில் அரசு தரவுகளே கூறியுள்ளது போல், 47 லட்சம் ஏக்கர்களில் பி.டி. பருத்தி விதை விதைக்கப்பட்டதில் 33.73 லட்சம் ஏக்கர்களில் இந்தப் பருத்தி விளைச்சலில் கடும் தோல்விகளைச் சந்தித்துள்ளது, சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் 20.46 லட்சம் விவசாயிகள் பாதிக்கபட்டனர். பருத்தி விதைத் தோல்வியினால் ரூ.3071.6 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு தகவல்களே கூறுகின்றன.

ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேச மாநிலங்களில் பி.டி. பருத்தி விதைகளால்தான் வேளாண் உற்பத்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விதை நிறுவனங்கள் தவறான விளம்பரங்களையும் தவறான வழிகாட்டுதலையுடைய அறிவுரைகளையும் வழங்கி வருகின்றன. இந்தப் போக்கை தடுக்காவிட்டால் விவசாயிகள் தற்கொலைகளே அதிகரிக்கும் என்று விவசாய அமைப்புகள் பல எச்சரிக்கை விடுத்துள்ளன.

கவனிக்குமா மத்திய அரசு.

News Summary: The protests were intense and widespread in the State where farmers burnt Bt cotton in several villages according to the Vidarbha Jan Andolan Samiti.

Share this Story:

Follow Webdunia tamil