வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கும் தொழில் நுட்பத்தை அளிக்கும் தனியார் முதலீடுகளுக்கு நிதி நிலை அறிக்கையில் வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industries - CII) மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்க் கிழமை இவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், “விவசாயம் தொடர்பான துறைகளில் தனியார் செய்யும் முதலீடுகளுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும். விவசாய உற்பத்தியைப் பெருக்கும் தொழில் நுட்பங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளது.
இது மட்டுமின்றி, அதிக உற்பத்தியைத் தரக் கூடிய பயிர்களை சாகுபடி செய்யவும், அதற்கான மண் வள ஆலோசனைகளுக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று சிஐஐ கூறியுள்ளது.