தென்மற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,
பிப்ரவரி 22ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன். 24ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள் உட்பட ஒரு சில இடங்களில் மட்டும் பரவலாக மழை பெய்தது.
கடந்த 3 தினங்களாக பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடித்த நிலையில், பிப்ரவரி 27ஆம் தேதி கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகையை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது.
இதனால் 28 அல்லது 29ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாயப்புள்ளது.
நிலநடுக்க தேதி கணிப்பின்படி மார்ச் 1ஆம் தேதியும், மார்ச் 5ஆம் தேதியும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.