மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. பருத்தி இந்த ஆண்டில் 80 இலட்சம் ஹெக்டேரில் பயிர் செய்யப்பட்டுள்ளதாக வனம், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையி்ல கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 2002ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அந்த ஆண்டில் 29,000 ஹெக்டேரில் மட்டுமே பி.டி.பருத்தி பயிரிடப்பட்டது என்றும், அது தொடர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுத்ததால், 8 ஆண்டுகளில் அதன் சாகுபடி அளவு 80 இலட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.
உற்பத்தி மட்மின்றி, பருத்திச் செடிக்குப் பாதிப்பு ஏற்படுத்திய போல்வார்ம் என்றழைக்கப்படும் புழுவின் தாக்கமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று ரமேஷ் கூறியுள்ளார்.
பருத்தியைப் போல மற்ற மரபணு மாற்ற விதைகளை அறிமுகப்படுத்துவது குறித்து விளக்கிய ரமேஷ், ஒவ்வொரு மரபணு மாற்ற விதையின் சாதக, பாதங்களை நன்கு ஆராய்ந்த பின்னரே அவைகளுக்கு அரசு அனுமதி வழங்கும் என்று கூறியுள்ளார்.