அந்நிய சந்தைகளில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புகளை கருத்தில் கொண்டு அயல் நாடுகளில் நிலங்களை வாங்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்று உணவு அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.
பொருளாதார பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சரத் பவார், இந்த விடயத்தில் சீனா கடைபிடித்த வழிமுறைகளை இந்தியா கடைபிடிக்காது என்று கூறினார்.
சீனாவின் அயல் நாட்டில் நிலம் வாங்கி, பயிர் விளைவித்து ஏற்றுமதி சந்தையில் வணிகம் செய்ததது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் பவார், தனியார் நிறுவனங்கள் அப்படிப்பட்ட திட்டத்தை செயல்படுத்தினால் அதற்கு அரசு ஆதரவளிக்கும் என்று கூறினார்.
இந்தியாவின் சில ‘விவசாயிகள்’ அர்ஜண்டினா, பிரேசில், உருகுவே ஆகிய நாடுகளில் பெரும் அளவிற்கு நிலங்களை வாங்கியுள்ளதாகவும் சரத் பவார் கூறினார்.
இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் இரண்டாவது பசுமைப் புரட்சியை கொண்டு வரப்போவதாகவும், அதன் மூலம் அங்கு உற்பத்தி ஆகும் நெல்லின் உபரியை ஏற்றுமதி செய்யப்போவதாகவும் கூறினார்.